Monday, Jun 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

இன்று தை அமாவாசை:மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

தமிழகம் மற்றும் வட இந்தியாவில் இன்று தை அமாவாசையை மக்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வெகு விமரிசையாக அனுஷ்டித்து வருகின்றனர்.

மாதம் தோறும் வரும் அமாவாசைகளில் ஆடி மற்றும் தை மாத அமாவாசை மிகவும் விமரிசையானது. குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மகாராஷ்டிரா,குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் புனித நதிகளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நதியில் நீராடி அமாவாசையை அனுஷ்டிப்பது வழக்கம். அதன் படி இன்று ராமேஸ்வரம், காவிரி போன்ற நதிகளிலும், வடக்கில் கங்கை, கோதாவரி, யமுனை உள்ளிட்ட நதிகளிலும் மக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீராடி வருகின்றனர்.

இது போன்ற புண்ணிய நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நதிகளில் நீராடும்போது பரம்பரை வழி பாவங்கள் நீங்கி புனிதம் அடைகிறோம் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

comments powered by Disqus