Saturday, Nov 17th

Last updateFri, 29 Jul 2016 3pm

திரு அண்ணாமலையில் மகா தீப கார்த்திகைத் திருநாள் கொண்டாட்டம்!

இன்று அக்னித் தலமான திரு அண்ணாமலையில் மகா தீப கார்த்திகைத் திருநாள் பக்தி கொண்டாட்டங்கள் நடைப்பெற உள்ளன.

கார்த்திகை மாதம் என்றாலே தகப்பன் ஸ்வாமியான சிவ பெருமானுக்கும், தகப்பனுக்கு பாடம் சொன்ன முருக பெருமானுக்கும் உகந்த மாதம் என்பது அனைவரும் அறிந்ததே. நாட்டில் உள்ள அனைத்து சைவ மற்றும் வைணவ திருத்தலங்களில் இந்த கார்த்திகை மகா தீபத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்றாலும், தமிழகத்தில் சிவ பெருமானின் அக்னித் தலமாக புகழ்ப் பெற்று விளங்கும் திரு அண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருநாள் மிகவும் புகழ் பெற்றது,

மகாத் தீபத் திருநாளன்று இந்த கோயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மலையுச்சியில் ஏற்றி வைக்கப்படும் நெய் தீபத்தைக் கண்டு மகிழ்ந்து, உணர்ச்சிப் பெருக்கில் அண்ணாமலையானுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்புவது வழக்கம்.

அதன்படி இன்று மாலை திரு அண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் என்பதால் சென்னையில் இருந்து 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் திரும்பவும் திரு அண்ணாமலையில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்னை வரும் என்பதுக் குறிப்பிடத் தக்கது. அசம்பாவிதம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மலையை சுற்றி 13 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மலைக்கு சுமார் 20 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதால் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.2 ஆளில்லாத விமானங்களில் கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

comments powered by Disqus