Wednesday, Sep 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

திரு அண்ணாமலை தீபத் திருநாளுக்கு பக்தர்கள் இந்தியன் வங்கியில் நெய் காணிக்கை

திரு அண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளுக்கு பக்தர்கள் இந்தியன் வங்கியில் நெய் காணிக்கை செலுத்த வசதி செய்துள்ளது இந்தியன் வங்கி.

திரு அண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளுக்கு முந்தைய 10 நாட்கள் முதல் மலையில் நெய் தீபம் ஏற்றி வைக்கப் படும். கடந்த 26ம் திகதி திரு அண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருநாள் உற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 5ம் திகதி கார்த்திகை தீப ஒளித் திருநாள் கொண்டாட உள்ள நிலையில் அதுவரை நெய் தீபம் ஏற்ற ஆயிரம் கிலோ நெய் தேவைப்படும் என்பதால், இந்த நெய் காணிக்கையை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் வழங்குவார்கள் என்பதால், இந்த நெய் காணிக்கையை இந்தியன் வங்கி மூலம் பக்தர்கள் செலுத்த இந்தியன் வங்கி வழிவகை செய்துள்ளது.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உற்சவ மூர்த்தி தினமும் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus