Saturday, Nov 17th

Last updateFri, 29 Jul 2016 3pm

சபரி மலை வரும் பக்தர்களின் வசதிக்கு ஆக்சிஜன் மையங்கள்:கேரள அரசு

சபரி மலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, மலை வரும் பாதையில் 14 ஆக்சிஜன் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, அம்மாநில அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சபரி மலைக்கு சென்று, ஹரிஹர சுதனை தரிசிக்க வேண்டும் என்றால் மரங்களும், கற்களும் அடங்கிய சிறு சிறு மலைகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். பம்பா நதியைக் கடக்கும் வரை பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்பதுதான் உண்மை. இதில் வயதானவர்கள் குழந்தைகள் அடங்குவர் என்பதால், இவர்களுக்கு மிக எளிதாக மூச்சுத் திணறல் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதைத் தவிர்க்க கேரள அரசு வழி நெடுகிலும் 14 ஆக்சிஜன் மையங்களை மைத்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே இதயம் மற்றும் நுரையீரல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் முதலுதவி மையங்கள் அங்கங்கு செயற்பட்டு வரும் நிலையில் இந்த அண்டு முதல் ஆக்சிஜன் மையங்களும் செயற்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus