Monday, Jun 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

திரு அண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருநாள் கொடியேற்றம்!

அண்ணாமலையார், உன்னாமலையம்மன் திருத்தலமான திரு அண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாட்டங்கள் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

டிசம்பர் மாதம் 5ம் திகதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டங்கள் நடைப்பெற உள்ளன. இதனையொட்டி, திரு அண்ணாமலையில் இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அடுத்து 10ம் நாள் தீபத்திரு விளக்கு என்று சொல்லப்படும் அண்ணாமலை ஜோதி மலை உச்சியில் ஏற்றிவைத்து அன்றையக் கொண்டாட்டங்கள் நடைப்பெறும் என்றும் தெரிகிறது. இன்று கொடியேற்றம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகளில் பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அண்ணாமலையானுக்கு அரோகரா என்று பக்திப் பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர்.

10ம் நாள் தீபஒளித் திருநாளன்று ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முருகன், சிவபெருமான் கோயில்களில் கார்த்திகை பெருவிழா கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைப்பெறும் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

comments powered by Disqus