Thursday, Nov 23rd

Last updateFri, 29 Jul 2016 3pm

ஹேப்பி பேர்த்டே டுவிட்டர்!:இன்று டுவிட்டரின் 9 ஆவது ஆண்டு நிறைவு!

இன்று உலகின் மிகப் பிரசித்தமான சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டர் ஆரம்பிக்கப் பட்டு 9 ஆண்டுகள் நிறைவு தினம் அதாவது டுவிட்டரின் 9 ஆவது பிறந்த தினமாகும்.

அதாவது மார்ச் 21 ஆம் திகதி 2006 ஆம் ஆண்டு மாலை 9.50 மணிக்கு டுவிட்டரின் இணை ஸ்தாபகர் ஜேக் டோர்சே டுவிட்டரின் முதலாவது டுவீட்டான 'just setting up my twttr' என்ற பதிவுடன் இத்தளம் ஆரம்பிக்கப் பட்டு 9 வருடங்கள் நிறைவு பெற்று விட்டன.

ஒரு டுவீட்டில் குறைந்தது சுமார் 140 எழுத்துக்கள் (கேரக்டர்கள் உட்பட) தினசரி பதிவு செய்யக் கூடிய உலகின் மிகப் பிரபலமான குறுஞ்செய்திப் பகிர்வு சமூக வலைத் தளமாக இன்று டுவீட்டர் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. டுவிட்டரை ஒவ்வொரு மாதமும் சுமார் 288 மில்லியன் மக்கள் புதிதாக உபயோகிப்பதுடன் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் டுவீட்டுக்கள் சராசரியாகப் பகிரப் படுகின்றன. இதனால் Facebook இற்குப் பிறகு உலகின் 2 ஆவது பிரசித்தமான சமூக வலைத் தளமாக டுவீட்டர் புகழ் பெற்றுள்ளது. Facebook இல் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 900 மில்லியன் பேர் சராசரியாக இணைந்து வருவதாகக் கணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகில் செய்தித் தளங்களுக்கு இணையாக ஏன் சற்று ஒரு படி மேலே போய் தற்போது டுவிட்டரிலேயே சூடான சம்பவங்கள் குறித்தும் பிரபலங்கள் குறித்தும் இயற்கை அனர்த்தங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சினிமா குறித்த தகவல்கள் உடனுக்குடன் அதிகளவு பேரிடம் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டுவிட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் முதல் பத்து பிரபலங்களின் விபரங்கள் இணையத் தளங்களில் வெளியாகியுள்ளன. அப்பட்டியல் பின்வருமாறு:

1.Katy Perry (54.2 மில்லியன் பின்பற்றுபவர்கள்) - பிரபல கர்ஜனைப் பாடகி (roar singr)
2.Justin Bieber (52.7 மில்லியன்) - இளம் போப் பாடகர்
3.Barack Obama (44 மில்லியன்) - அமெரிக்க அதிபர்
4.Lady Gaga (41.5 மில்லியன்) - பிரபல பாடகி
5.YouTube (43.4 மில்லியன்) - பிரபல வீடியோ பகிர்வு தளம்
6.Taylor Swift (41.7 மில்லியன்) - பிரபல போப் பாடகி
7.Britney Spears (37.9 மில்லியன்) - பிரபல பாடகி
8.Rihanna (36.2 மில்லியன்) - பஜன் ஸ்டார்
9.Instagram (33.7 மில்லியன்) - சமூக புகைப்பட வலைத் தளம்
10. Justin Timberlake (33 மில்லியன்) - பிரபல போப் பாடகர்

comments powered by Disqus