Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் 14 போதை கடத்தல் பேர்வழிகளுக்கு மரண தண்டனை விதிக்கிறது இந்தோனேசியா

எதிர்வரும் தினங்களில் இந்தேனேசியாவில் போதை மருந்துக் கடத்தல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 14 பேருக்கு நீதி மன்றத்தில் மரண தண்டனை தீர்ப்பு விதித்ததன் மூலம் அதனை உறுதி செய்துள்ளது அந்நாட்டு அரசு.

இந்தோனேசிய அரசின் இந்த மனிதாபிமானம் அற்ற செயற்பாட்டுக்கு அந்நாட்டு மக்களும் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தோனேசிய அரசின் இந்த திட்டமிட்ட மரண தண்டனை நிறைவேற்றத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது. மரண தண்டனைக்கு உள்ளாகி உள்ள நபர்களின் பெயர் விபரங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப் படாத போதும் இந்நபர்கள் நைஜீரியா,  சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவருக்கும் நுசாக்கம்பன்கான் தீவு சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மரண தண்டனையின் தன்மை குறித்து இந்தோனேசிய அரசு அந்நாட்டு சட்டப் படி முன்னதாகவே குற்றவாளிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன் இத்தண்டனை அநேகமாக வெள்ளிக்கிழமை காலை நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus