Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஜேர்மனி குடிவரவு அலுவலகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு

நேற்று புதன்கிழமை ஜேர்மனியின் நுரெம்பேர்க் பகுதியில் ஷிர்ண்டோர்ஃப் இற்கு அருகே அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்துக்கு வெளியே சிறியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக ஜேர்மனியின் Bayerischer Rundfunk என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

ஓர் சிறிய சூட் கேஸில் நிரப்பப் பட்டிருந்த ஏரோசோல்ஸ் அடங்கிய  சிறிய ரக குண்டே நுர்ரெம்பேர்க் பகுதியில் ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப் பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.  இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus