Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

பிரான்ஸில் பாதிரியாரைக் கொலை செய்தவர்களுக்கு ISIS உடன் தொடர்பு

அண்மைக் காலமாக பிரான்ஸ் ISIS போராளிகளின் அடுத்தடுத்த தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றது.

செவ்வாய்க்கிழமை பிரான்ஸின் வடக்கே ரூவன் என்ற நகரில் உள்ள தேவாலயத்தில் மூத்த பாதிரியார் ஒருவரைக் கொலை செய்த ISIS போராளிகள் இருவர் பின்னர் பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர்.

இவர்களிடம் கத்திகள் காணப்பட்டதுடன் போலிசாரால் சுட்டுக் கொல்லப் பட்டு வரும் வரை பணயக் கைதிகள் அச்சத்துடன் காணப் பட்டனர். ஆயினும் பாரிய
உயிரிழப்பு இன்றி அனைவரும் மீட்கப் பட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இச்சம்பவத்தில் தேவாலய உறுப்பினர் ஒருவர் மட்டும் மோசமான காயங்களுடன்
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

தாக்குதல் தாரிகளில் ஒருவர் தேவாலயத்தின் அருகே வசித்து வந்ததாகவும் கடந்த வருடம் ISIS இல் சேர முயற்சித்ததாகவும் தெரிய வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் சில நபர்களை போலிசார் கைது செய்துள்ளனர். 2 வாரங்களுக்கு முன்னர் தான் பிரான்ஸின் நீஸ் நகரில் கேளிக்கை கூட்டத்தின்
மீது டிரக்கை ஓட்டிச் சென்று 84 பேரை தீவிரவாதிகள் கொலை செய்த கொடூர சம்பவம் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus