Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

பங்களாதேஷில் பாரிய தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப் பட்டது! : 9 போராளிகள் கொலை

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை போலிசார் கண்டு பிடித்து தாக்குதல் நடத்தியதில் 9 போராளிகள் கொல்லப் பட்டும் ஒருவர் கைது செய்யப் பட்டும் உள்ளனர்.

இத்தீவிரவாதிகள் அனைவரும் JMB எனப்படும் ஜமாத் உல் முஜாஹிடீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என இனம் காணப் பட்டுள்ளது. மேலும் இவர்கள் அண்மையில் பங்களாதேஷில் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். ஸ்டோர்ம் 26 என்ற இந்த தாக்குதலில் வெகு நேர துப்பாக்கிச் சூட்டின் பின்னரேயே 9 தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர். இதை அடுத்து பங்களாதேஷ் இன்னமும் பாரிய தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள நாடாகவே இருப்பதாகவும் பாதுகாப்புப் படையினர் ரெயிடு நடத்துவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ள சூழ்நிலை நிலவுவதாகவும் பிரதமர் சேயிக் ஹசினா தெரிவித்துள்ளார்.

புலனாய்வுத் தகவல் படி தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை கிடைத்த பின்னர் தான் வங்கதேச போலிசார் ரெயிடு நடத்தி தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus