Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

வியட்நாமின் புதிய அதிபராக மறுபடியும் தேர்வானார் ட்ரான் டாய் குவாங்

திங்கட்கிழமை வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அந்நாட்டின் அதிபராக மறுபடியும் தேர்வாகியுள்ளார் ட்ரான் டாய் குவாங். திங்கட்கிழமை ஹனோயில் கூடிய 14 ஆவது தேசிய அசெம்ப்ளியில் முதலாவது தேர்வில் சுமார் 98.2% வீத வாக்குகள் பெற்று இவர் அதிபராகத் தேர்வாகி உள்ளார். முன்னதாக ஏப்பிரல் 2 ஆம் திகதி முன்னால் அதிபர் த்ருவோங் டான் சாங் இன் அதிபர் பதவியை இவர் சுவீகரித்திருந்தார்.

மேலும் தனது பதவிப் பிரமான அறிக்கையின் போது தனது தேசத்துக்கு உறுதிபட விசுவாசம் மிக்கவனாக இருப்பேன் எனவும் பொதுமக்கள் மற்றும் வியட்நாம் சமூகக் குடியரசின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு நடப்பேன் எனவும் வாக்களித்தார். நாட்டின் பாதுகாப்பு இராணுவம் உட்பட முக்கிய பதவிகள் சிலவற்றை வைத்திருக்கும் அதிபர் குவாங் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

comments powered by Disqus