Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஃபுளோரிடா கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!:17 பேர் படுகாயம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிளப் புளூ என்ற விடுதியில் நள்ளிரவு 12:30 இற்கு சற்று நேரம் கழித்து மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 2 நபர்கள் கொல்லப் பட்டும் 17 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். Fort Myers இல் உள்ள கிளப்பில் இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் பலர் இளவயதினர் ஆவர். 

தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். 6 வாரங்களுக்கு முன்னர் தான் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லாண்டோ நகரில் இஸ்லாமிய தேச போராளிகள் நிகழ்த்திய மோசமான தற்கொலைத் தாக்குதலில் 49 பொது மக்கள் கொல்லப் பட்டதுடன் இது அமெரிக்காவின் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகவும் பதியப் பட்டு இருந்தது.

இதேவேளை ஞாயிறு இரவு ஜேர்மனியின் தெற்கு நகரமான ஆன்ஸ்பாஹ் இல் இடம்பெற்று வந்த இசை நிகழ்ச்சியின் போது 27 வயதுடைய ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தாக்குதல் நடத்தியவர் சிரியாவைச் சேர்ந்த அகதி என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தான் மூனிச் இலுள்ள அங்காடித் தொகுதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 பேர் கொல்லப் பட்டும் ஜூலை 18 ஆம் திகதி வுவெர்ஷ்புர்க் நோக்கிச் சென்ற ரயிலில் கத்திக் குத்து மேற்கொண்டு 4 பேர் காயம் அடைந்தும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus