ஊழல் மோசடியாளர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல: ரணில் விக்ரமசிங்க
- Tuesday, 26 July 2016 06:28
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மக்களின் பணம் கொள்ளையிடப்பட்டதனால் காத்திரமான மக்கள் அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையிடுவதில்லை. இதனால் மக்கள் நலன் திட்டங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும்போது அதனை அரசியல் பழிவாங்கல்களாக கருதுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றுள்ளார்.