Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை: எஸ்.கே.கவுல்

அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ண கவுல் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் காப்பகத்திலிருந்து குழந்தைகள் காணாமல் போவதுக் குறித்து விசாரிக்க தனி விசாரணைக்கு குழுவை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கலானது. இந்த வழக்கின் விசாரணை இன்று எஸ்.கே.கவுல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக்கோல் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, நிதி முறைகேடு, நீர் ஆதார நிலைகள் தூர் வாருதல் போன்ற விஷயங்கள் என்றால் நீதிமன்றம் தலையிடலாம். ஆனால் அரசியல் பிரச்சனை சார்ந்த வழக்குகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் முறையிடலாம் என்று மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர் நீதிபதிகள்.

comments powered by Disqus