Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட சட்டத் திருத்தம் தங்களுக்கு எதிரானது என்றும், உடனடியாக இதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கடந்த ஜூன் மாதம் முதல் தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதன் உச்ச கட்டமாக கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். இவர்களில் 27 பேரின் மீது சென்னை ஜார்ஜ் டவுன் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் 5 வழக்கறிஞர்களை ஜார்ஜ்டவுன் போலீசார் கைது செய்தனர்.

வழக்கறிஞர் போராட்டமும் முடிவடைந்து, நீதிபதிகளும் சட்டத் திருத்தம் உடனடியாக அமலுக்கு வராது என்று அறிவித்துள்ள நிலையில், இந்த 5 வழக்கறிஞர்களை காவல் நிலையம் விடுதலை செய்யவில்லை., கீழமை நீதிமன்றங்கள் ஜாமீனும் அளிக்கவில்லை.இதையடுத்து வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.அந்த ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் வழக்கறிஞர்கள் 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளனர். அதாவது விடுதலையான 5 வழக்கறிஞர்களும்
சென்னையில் 2 வாரங்களுக்கு இருக்கக் கூடாது என்றும், அந்த இரண்டு வாரமும் தினமும் காலையில் விழுப்புரம் காவல்நிலையத்தில் சென்று கை எழுத்திட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்..

comments powered by Disqus