Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

அனைத்து மானியங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதால் நாடாளுமன்றத்தில் அமளி

அனைத்து மானியங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.

இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் மக்கள் சமையல் எரிவாயு மானியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றைப்பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று தெரிவித்தது.இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும் அமளியைக் கிளப்பின. இதனால் இரு அவைகளும் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதாவது இன்னமும் 40 சதவிகித மக்கள் ஆதார் அட்டை பெறாத நிலையில், ஆதார் அட்டையை மானிய பொருட்களுக்கு கட்டாய படுத்தினால், ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இதையடுத்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதார் அட்டை கிடைக்கும் வரை, மானியங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்கிற நடைமுறையே நீடிக்கும்
என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

comments powered by Disqus