Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

கைது செய்த வழக்கறிஞர்களை விடுவிக்கும் வரை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஓயாது:வழக்கறிஞர்கள்

போராட்டத்தின் போது கைது செய்த வழக்கறிஞர்கள் 5 பேரை விடுதலை செய்யும் வரை நீதிமன்றத் புறக்கணிப்புப் போராட்டம் முடிவடையாது என்று,
வழக்கறிஞர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன..

கடந்த ஜூன் மாதம் 1ம் திகதி முதல் தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்றத் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றத்தின் உள்ளோ, அல்லது நீதிபதிகளுக்கு எதியோராகவோ வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபடும் பட்சத்தில், அந்த வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கலாம் என்று புதிய சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் அமல்படுத்தி உள்ளது. ஆனால், அதை இன்னமும் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்று நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்தும், அதை ஏற்றுக்கொள்ளாமல் வழக்கறிஞர்கள் நீதிமன்றத் புறக்கணிப்புப் போராட்டடம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நடத்தியதால், நீதிமன்றத்தை சுற்றி ஒரு அசாதாரண சூழல் நிலவியது.

இதையடுத்து புதிய சட்டத் திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நீதிபதி எஸ்.கே.கவுல் அறிவித்தார். எனினும் போராட்டத்தின்போது கைது
செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்கள் மற்றும் பார் கவுன்சிலால் நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களை மீண்டும் சேர்க்கும்வரை தங்களது
நீதிமன்றத் புறக்கணிப்புப் போராட்டம் நீடிக்கும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் ஆலோசித்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

comments powered by Disqus