Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம்

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப.சிதம்பரமாக இருக்கலாம் என்று ஒரு தகவல் காங்கிரஸ் வட்டாரங்களில் கசிந்து வருகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த இவிகேஎஸ். இளங்கோவன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தமது பதவியை ராஜினாமா செய்தார். இவரை அடுத்து இந்த பதவிக்கு கராத்தே தியாகராஜன், குஷ்பூ, திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ் யாராவது வருவார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில் திடீர்த் திருப்பமாக ப.சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

காரணம், இன்று காலை சோனியாவும், ப,சிதம்பரம் அவர்களும் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் சந்தித்து வெகு நேரம் பேச்சு வார்த்தை நடத்தி
உள்ளார்கள். எனவே, சோனியாகாந்தி ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. இதே சமயம்,
ஏர்செல்-மெக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளது என்று வழக்குப் பதிவாகி
இருப்பதால், ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பொறுப்பை அளிக்க ராகுல்காந்திக்கு விருப்பம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

comments powered by Disqus