Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

சுப்ரமணிய சுவாமி மீதான அவதூறு வழக்குகளுக்குத் தடை:சென்னை உயர் நீதிமன்றம்

சுப்ரமணிய சுவாமி மீதான தமிழக அரசின் அவதூறு வழக்குகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் மீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்பியுமான சுப்ரமணிய சாமி மீது, தமிழக அரசு சார்பில் 6 பிரிவுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அவை விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் நேரில் ஆஜரான சுப்ரமணிய சாமி, தாம் முதல்வரை அவதூறாகப்ப் பேசவில்லை என்றும், எனவே அரசு தரப்பில் தம்மீது வழக்கு தொடுக்க அவசியம் இல்லை என்றும் கூறி இவ்வழக்குகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை வைத்திருந்தார். தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா குறித்து தாம் பேசிய கருத்துக்களை அவரகள் அவதூறு என்று அரசு சார்பாக வழக்கு தொடுத்துள்ளனர் என்றும் சுப்ரமணிய சாமி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து சுப்ரமணிய சாமி மீதான அவதூறு வழக்குகளை சென்னை உயர நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

comments powered by Disqus