Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகள் வருகிற 29ம் திகதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.

பொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர், வங்கி ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என, வங்கிகள் ஊழியர்கள் நல சங்க தலைவர் வெங்கடாசலம் டெல்லியில் அறிவித்தார்.இதனால் நாடு முழுவதும் அன்றைய தினம் வாங்கி சேவை பாதிக்கப்படும் என்பதும். பல லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதும் குறிப்பிட்டது தக்கது.

 

comments powered by Disqus