Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

மாமனிதர் அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று

மாமனிதர் அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு, பலவேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைப்பெற்று வருகின்றன.

அப்துல்கலாம் பிறந்த ராமேஷ்வரம் பேக்கரும்பில் அவரது உடல் கடந்த வருடம் இதே நாளில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மனிதர்குல மாணிக்கம், எளிமையின் இருப்பிடமாகாத் திகழ்ந்த இவரின் நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்க இன்று மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்ய நாயுடு முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

இப்போது முதற்கட்டமாக அவரது நினைவிடத்தில் 350 கிலோ எடை கொண்ட 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா நிகழ்வும் நடைப்பெற்றது. அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை மக்கள் வந்து ஆர்வமுடன் பார்த்து செல்லும் அளவுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்க உள்ளதாகவும், இதற்கு கூடுதல் நிலம் வழங்கியாய் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்..

comments powered by Disqus