Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது: எஸ்.கே.கவுல்

வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அறிவித்துள்ளார். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தொடுத்து இருந்ததாகத் தெரிய வருகிறது. அந்த மனுவில், புதிய சட்டத் திருத்தத்தின் படி, நீதிமன்றத்தில் நடக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் வழக்கறிஞர்கள் பொறுப்பாகும் நிலை  உள்ளது. எனவே, இந்த சட்டத் திருத்தத்தத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், பின்னர் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்மானத்துக்கு வரலாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

இதையடுத்து, நீதிபதி எஸ்.கிருஷ்ண கவுல், புதிய சட்டத் திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று அறிவித்துள்ளார். இதனால வழக்கறிஞர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், இந்த சட்டத் திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற பாடுபடுவோம் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

 

comments powered by Disqus