Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு!

இளம்பெண் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று கருதப்படும் ராம்குமாரை மீண்டும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமாரை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கைது செய்து புழல் சிறையில் நீதிமன்றத் காவலில் இருந்த ராம்குமாரை கடந்த வாரம் போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், கண்காணிப்பு கேமிராவில் பதிவான உருவங்களை வைத்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ராம்குமாரை விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கு ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும், எழும்பூர் நீதிமன்றத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

comments powered by Disqus