Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால் ஜல்லிக்கட்டை அனுமதித்துவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால் ஜல்லிக்கட்டை அனுமதித்துவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தாத தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசு சில விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி ஒரு சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்தது. இதற்கு பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல வாரிய அமைப்பு எதிர்ப்புத் தொரிவித்து, மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மேல் முறையீடு செய்தன. 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் வாதிட்டார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள நீதிபதிகள், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் ஜல்லிக்கட்டுப் போட்டியை அனுமதித்துவிட முடியாது என்று கூறியுள்ளனர். மேலும், அப்போது நடைமுறையில் இருந்த 12 வயது சிறுமிகள் திருமணம் என்பது இப்போது எப்படி பால்ய விவாகம் தவறு என்று சட்டம் சொல்கிறதோ, அதுபோன்று காலச்சூழல்தான் இதையும் தீர்மானிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

வருகிற ஆகஸ்ட் மாதம் 30ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ள நீதிபதிகள், அப்போது தமிழக அரசும், மத்திய அரசும் கூடுதல் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தனர்.

 

comments powered by Disqus