Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

விஜயகாந்த்- பிரேமலதாவுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்!

விஜயகாந்த்-பிரேமலதாவுக்கு திருப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டு திருப்பூரில் நடைப்பெற்ற தேமுதிக நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக இருவர் மீதும் திருப்பூர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு விசாரணை நடைப்பெற்ற ஒரு நாளில் கூட, விஜயகாந்தும், பிரேமலதாவும் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டும், ஆஜராகாமல் இருவரும் வாய்தா வாங்கினார்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் விஜயகாந்த் தரப்பு வாய்தா கேட்டதால், நீதிபதிகள் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.

 

comments powered by Disqus