Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

கார்கில் போர் நினைவு தினம் இன்று!

இன்று கார்கில் போர் நடைப்பெற்ற 17 வது நினைவு தினம் நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

டெல்லியில் உள்ள கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் மத்திய அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இது போன்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள போர் நினைவு சின்னத்தில்

கார்கில் வெற்றி நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமது டிவிட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கார்கில் போரில் வீர மரணம் அடைந்து உயிர் நீத்த வீரர்களுக்கு, தாம் தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ளார். இவர்களின் வீர மரணம் தம் போன்றவர்களை புதிய உத்வேகத்துடன் செயல்பட வைப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

comments powered by Disqus