Tuesday, Jun 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

இந்தியாவுக்கான சீனாவின் பத்திரிகையாளர்களின் விசா காலம் முடிவு!

இந்தியாவுக்கான சீனாவின் பத்திரிகையாளர்களின் விசா காலம் முடிவடைந்ததாக சீனாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டு செய்திகளை சேகரிக்க சீனாவிலிருந்து 3 பத்திரிகையாளர்களை அந்த நாட்டு அரசு இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இவர்களின் விசா காலம் முடிவடைந்துள்ளது என்றும், இந்த பத்திரிகையாளர்களின் விசா காலத்தை இனி நீடிக்க முடியாத நிலை உள்ளது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.இவர்கள் 3 மாதங்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இவர்கள் மூன்று பேருக்கு பதிலாக வேறு 3
பத்திரிகையாளர்களை இந்தியாவுக்கு சீனா அனுப்பி வைக்கலாம் என்றும் இந்தியா தரப்பில் சீனாவிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த 3 பத்திரிகையாளர்களும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் இந்தியா குற்றச்சாட்டு வைத்துள்ளது.ஆனால், இதை ஏற்காத சீனா, இந்தியா அணுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளில் சேர, சீனா எதிர்ப்புத் தெரிவித்ததற்கு பழி வாங்கும் வகையில் இந்தியா இப்படி நடந்துக்கொள்கிறது என்று சீனா காட்டமாகத் தெரிவித்துள்ளது.அதோடு, இப்போது இந்தியாவில் இருக்கும் பத்திரிகையாளர்கள்தான் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வந்ததால் இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். எனவே,இவர்களுக்கே இந்தியா விசாவை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் சீனா கோரிக்கை வைத்துள்ளது.

comments powered by Disqus