Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

மாயாமான விமானம் - கடலுக்கு அடியில் தேட முடிவு

மாயமான விமானத்தை கடலின் மேல் பரப்பில் தேடும் பணியில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இன்று முதல் கடலுக்கு அடியில் தேடும் பணி நடைபெற உள்ளது.

சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமான் புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக சரக்கு விமானம் கடந்த 22ந்தேதி மாயமானது. 29 பேர் பயணித்த அந்த விமானத்தை தேடும் பணியில் 17 கப்பல்கள் 14 ஹெலிகாப்டர்கள், 9 போர் விமானங்கள் ஈடுபட்ட போதிலும் கடந்த 4 நாட்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு கடலோர
காவல்படை ஐஜி ராஜன் பர்கோத்ரா, விமானத்தில் இருந்த இஎல்டி எனப்படும் அவசரகால சிக்னல் அனுப்பும் கருவி செயல்படாததால் விமானத்தில் இருந்து எந்த
சிக்னலும் கிடைக்கவில்லை என்றார்.

அதே நேரம் ஏ.என் 32 ரக விமானங்கள் காலாவதியானவை என்கிற விமர்சனத்தையும் அவர் மறுத்தார். இதற்கிடையே தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி சுனில் லாம்பா டெல்லியில்
நேற்று தெரிவித்தார்.

comments powered by Disqus