Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு செய்தார் என்று வங்கிகள் அளித்த புகாரின் அடிப்படையில்,தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவுப் பிறப்பித்து உள்ளது.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாத விவகாரத்தில் வங்கிகள் கீழமை நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தும், தலைமறைவாகச் சென்று லண்டனில் வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவுகளை விஜய் மல்லையா உதாசீனப் படுத்தியுள்ளார் என்று வங்கிகள் குற்றச்சாட்டு வைத்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளன. அதோடு, தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தம்மீதான சொத்துக் கணக்குகளைவிஜய் மல்லையா மிகவும் தவறாக காண்பித்துள்ளார் என்றும் வங்கிகள் குற்றச்சாட்டு வைத்தன. இதையடுத்து இதுத் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

 

comments powered by Disqus