Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரை ஆம் ஆத்மி எம்பி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தடை

ஆகஸ்ட் 3ம் திகதி வரை ஆம் ஆத்மி எம்பி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதித்துள்ளார் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.

நாடாளுமன்ற பாதுகாப்பு விவரங்கள் குறித்து செல்போனில் பதிவு செய்து, சமூக வளைத் தளத்தில் பதிவேற்றம் செய்தார் ஆம் ஆத்மி எம்பி பகத் மான். இதனால் தீய சக்திகளுக்கு வழிக்காட்டியதை போலாகிவிடும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவியது.இதையடுத்து பகத் மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் நிலவியது. எனவே, 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து பகத் மான் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவுப் பிறப்பித்து உள்ளதாக சுமித்ரா மகாஜன் இன்று மக்களவையில் தெரிவித்தார். அதோடு, வருகிற ஆகஸ்ட் 3ம் திகதி வரை நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று தாம் அறிவுறுத்தி உள்ளதாகவும் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

 

comments powered by Disqus