Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

பஞ்சாப் மாநில அரசியலிலிருந்து விலகிக்கொள்ள நிர்பந்தம் செய்ததால் விலகினேன்:சித்து

பஞ்சாப் மாநில அரசியலிலிருந்து விலகிக்கொள்ள பாஜக நிர்பந்தம் செய்ததால் பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகினேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

அண்மையில் பஜவின் சார்பில் மாநிலங்களவை எம்பியாக இருந்த சித்து, பதவியை ராஜினாமா செயததோடு, பாஜகவிலிருந்தும் விலகிக் கொண்டார். இதுக்குறித்து சில நாட்களாக வாய் திறவாமல் இருந்த சித்து இன்று, மாநில அரசியலிலிருந்து பாஜக விலகிக் கொள்ளுமாறும், மாநில விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும்  பாஜக தொடர்ந்து நிர்பந்தம் செய்து வந்தது என்று குற்றச்சாட்டு
வைத்தார்.மேலும், மாநிலத்துக்கு ஒன்றும் செய்ய இயலாமல் இருப்பதைவிட பதவியிலிருந்து விலகுவது நல்லது என்று பதவியை ராஜினாமா செய்தேன் என்றும் மேலும் கூறினார்.இதற்கு மேல் கட்சியிலும் நீடிக்க விருப்பம் இல்லாமல் கட்சியிலிருந்து விலகிக் கொண்டேன் என்று சித்து கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாகவும், ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கசிந்த தகவல் குறித்த கேள்விக்கு, மாநிலத்துக்கு நல்லது செய்ய முடியும் என்கிற ரீதியிலான கட்சியில் இணைந்து பஞ்சாப் மாநிலத்துக்கு பல நல்ல விஷயங்களை செய்ய காத்திருப்பதாகவும், நீங்களும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சித்து பதில் கூறினார்.

comments powered by Disqus