Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்:வைகோ

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பேசியுள்ளார். இதையடுத்து இதை மேற்கோள் காண்பித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, காவிரி டெல்டா பகுதிகளில்
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், அந்த மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமும், விவசாயத்துக்கான நீராதாரமும் கெட்டுப் போகும் என்பதால், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு ஒத்துழைக்கக் கூடாது என்று வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

அதோடு, தமிழக காவிரி டெல்டா பகுதி மக்களின் மீது பாஜக அரசுக்கு எத்தனை அக்கறை உள்ளது என்பது பாஜக மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் தெரிகிறது என்று கிண்டலாக அறிக்கை விடுத்துள்ள வைகோ காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளார்.

comments powered by Disqus