Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறப்பு

வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி மக்கள் கொண்டாட உள்ள ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

தமிழக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆடிப்பெருக்கு எனப்படும் ஆடி 18 தின பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். இதற்கு அடிப்படை விஷயமாக இருப்பது காவிரி ஆற்று நீர் மட்டுமே. காவிரி ஆற்றங்கரையின் ஓரத்தில் காவிரி நதிக்கு படையலிட்டு, படையலை ஆற்றில் விடுவது வழக்கம். இதற்கு காவிரியில் நீரில்லை என்றால் மக்கள் மிகவும் ஏமாந்து போவதோடு,
அன்றைய விவசாய வருடம் என்பது அவர்களுக்குப் பொய்த்தது போன்ற ஒரு அறிகுறியையும் அது காட்டும் என்பது அவர்களது நம்பிக்கை.

எனவே, காவிரி டெல்டா மாவட்ட விவசாய மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை  விமரிசையாக கொண்டாடும் வகையில், வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீரை, காவிரியில் கூடுதலாக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்ததாகத் தெரிய வருகிறது. இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் இன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டார். ஏற்கனவே வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிநீர் என்று காவிரி டெல்டா விவசாய மக்களின் குடிநீர்த்த தேவைக்காக திறந்துவிடப்பட்ட
நிலையில், இப்போது வினாடிக்கு மொத்தம் 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது என்பதுக் குறிப்பிட்டது தக்கது.

 

comments powered by Disqus