Monday, Dec 17th

Last updateFri, 29 Jul 2016 3pm

நடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்

நடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து இன்று முற்றிலுமாக விடுவிக்கப்பட்டார். நடிகர் சல்மான்கான் கடந்த 1998ம் வருடம் ராஜஸ்தான் ஜோத்பூர் அருகே படப்பிடிப்பில் இருந்தபோது, ஜோத்பூர் வனப்பகுதியில், அரிய ரக மான் ஒன்றை வேட்டையாடியதாக அவர் மீது குற்ற வழக்கு கீழமை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சல்மான் கானுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், சல்மான் கான் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சல்மான் கான் மீதான இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சல்மான் கானுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில், வழக்கிலிருந்து சல்மான் கானை முற்றிலுமாக விடுவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

comments powered by Disqus