Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: எஸ்.கே.கவுல்

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் அசாதாரண சூழல் நிலவுவதால், வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ண கவுல் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 250 அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை உயர் நீதிமன்றம்செல்லும் அனைத்துப் பாதைகளிலும், அனைத்து சாலைகளிலும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குத் தெரிய வந்ததை அடுத்து அவர், வழக்கறிஞர்கள் அனைவரும் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வழக்கறிஞர்களின் போராட்டத்தால், நீதிமன்றத்தை சுற்றி அசாதாரணமான சூழல் நிலவுகிறது என்றும், வழக்கறிஞர்களுக்கு எதிரான கொள்கையுடைய நீதிபதி தாம் இல்லை என்றும், தாமும் வழக்கறிஞராக இருந்து பின்னரே நீதிபதியானவர் என்றும் கவுல் தெரிவித்துள்ளார்.வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், இவர்கள் இப்படி போராட்டம் நடத்துவது என்பது மிகவும் அசாதாரண சூழலை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார் அவர்.

comments powered by Disqus