Thursday, Aug 16th

Last updateFri, 29 Jul 2016 3pm

மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணிகளுக்கு இஸ்ரோ உதவி

கடந்த வெள்ளிக்கிழமை தாம்பரத்திலிருந்து அந்தமான் புறப்பட்டு மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணிகளுக்கு இஸ்ரோ உதவியை நாடி உள்ளது, மத்திய பாதுகாப்புப் துறை.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமான் போர்ட்பிளேருக்குப் புறப்பட்ட இந்திய போர் விமானம் சிறிது நேரத்தில்
மாயமானது. இதில் 29 வீரர்கள் இருந்தனர் என்கிற நிலையில், விமானத்தின் கதி என்னவாயிற்று என்று இன்னமும் ஒரு தகவலும் தெரியவில்லை. இந்திய கடற்படை வீரர்கள், இந்திய கடலோர காவல் படை வீரர்கள், இந்திய விமானப்படை வீரர்கள் விமானத்தைத் தேடும் பணிகளில் இன்றுடன் 4 வது நாட்களாக ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு தகவலும் கிடைக்காத நிலையில் இந்திய விஞ்ஞான மையமான இஸ்ரோவின் செயற்கைகோள் உதவியுடன், விமானத்தைத் தேடும் பணிகளில் தற்போது இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

comments powered by Disqus