Saturday, May 25th

Last updateFri, 29 Jul 2016 3pm

இணையத்தை கலக்கும் ஜோசப் கோனி யார்? - வீடியோ

ஜோசப் கோனி இணையத்தில் இரு நாட்களுக்குள் பிரபலமடைந்துள்ள பெயர் இதுதான்.

இவனைப் பிரபலமடையச் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட ஆவணப்படம் யூடியூப்பில் இன்றுவரை 21,107,207 ஹிட்டுக்கள் பெற்றுள்ளது.

உகண்டா மற்றும் ஏனைய ஆபிரிக்கா நாடுகளில் 25 வருடங்களாக தீவிரவாத நடவடிக்களின் மூலம் 30,000 சிறுவர்கள் வரை பாதிப்புற செய்தவன்.

கடத்தல் , இராணுவ பயிற்சி, முக உருவங்களை சிதைத்தல் , பாலியல் கொடுமைகள் என்ற ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இவன் மீது.

ஜோசப் கோனியை பிரபலமடையச் செய்வது மட்டுமே நோக்கம் அவனை கொண்டாடுவதற்கு அல்ல என்கிறார் ஆவணத் திரைப்படத்தின்  தயாரிப்பாளரான Jason Russell.

Kony 2012 எனும் ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு 9 வருடங்கள் எடுத்ததாகவும் ஜோசப் கோனியின் கொடுமைகள் தொடரும் இறுதி ஆண்டாக 2012 இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்.  Kony 2012 ஆவணப்படத்தின் இயக்குனர் Jason Russell.

Invisible  Children  என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவிகளும் மேற்கொள்கின்றனர்.

அடுத்து வரும் 30  நிமிடங்கள் மிக முக்கியமானவை என்ற அறிவிப்புடன் ஆரம்பிக்கும் ஆவணப்படத்தை பார்வையிட.

ஏனைய யூடியூப் கோர்னர் தகவல்கள் இங்கே

comments powered by Disqus