இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனைகளை படைத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 481 ஓட்டங்களை எடுத்தது.
இதுவே ஒரு நாள் தொடர் ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகூடிய ஸ்கோர் எனும் புதிய உலக சாதனை இதன் மூலம் படைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி சார்பில், பார்ஸ்டோவ் 139 ஓட்டங்களும், ஹேல்ஸ் 147 ஓட்டங்களும் எடுத்தனர். இதே மைதானத்தில் தான் இங்கிலாந்து முன்னைய அதிகூடிய ஓட்டங்கள் எனும் சாதனையையும் படைத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி நேற்றைய போட்டியில் 242 ஓட்டங்களால் படு தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3-0 என இங்கிலாந்து அணி இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி எனும் சாதனையையும் இதன் மூலம் படைக்கப்பட்டது.