பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து டேவிட் வோனரும் நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய அணித் தலைவராக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்கா அணியுடன் கேப்டவுனில் இடம்பெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கமரூன் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது.