Saturday, Nov 17th

Last updateFri, 29 Jul 2016 3pm

உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளில் இத்தாலியின் ஒஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா முதலிடம்!

அண்மையில் வெளியிடப் பட்ட உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளின் பட்டியலில் வடக்கு இத்தாலியின் சிறிய நகரங்களில் ஒன்றான மொடெனாவில் அமைந்துள்ள ஒஸ்டெரிய ஃபிரான்செஸ்கானா என்ற உணவகம் முதலிடம் பெற்றுள்ளது. இது கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் மிகப் பிரசித்தமான உணவகமான எல் செல்லெர் டே கான் றொக்கா இனை 2 ஆம் இடத்துக்கு தள்ளி விட்டது குறிப்பிடத்தக்கது.

 3 ஆம் இடத்தில் நியூயோர்க்கின் எலெவென் மாடிஸன் பார்க் உள்ளது. மேலும் 20 ஆம் இடத்திலுள்ள ஹாங்கொங் ஆம்பெர் உணவகம் குறித்த பட்டியலில் உள்ள 7 ஆசிய நாடுகளிலுமே 2 ஆவது உணவகம் ஆகும். இதை அடுத்து பாங்கொக்கின் கக்கான் 23 ஆம் இடத்தில் உள்ளது. இந்த உணவகங்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு ஜூன் 13 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற போது இத்தாலிய வகை உணவுகளை தயார் படுத்திய மஸ்ஸிமோ பொட்டுரா அனைவருக்கும் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், எமது கடமை எப்போதும் கடினமாக உழைப்பதே! மக்கள் எம்மை Rock Stars என்கின்றனர். ஏனெனில் நாம் அங்கிருந்து இங்கு இந்த நிகழ்வுக்காகப் பயணித்து வந்துள்ளோம். இதுவும் எமது தொழிலின் வகை பற்றியதே. ஒவ்வொரு நாளையும் வெற்றி கொள்ள நாம் எப்போதும் சமையல் அறையில் எமது நேரத்தை செலவிட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளின் பட்டியல் :
(நன்றி : தகவல் CNN)

The 50 best

1. Osteria Francescana (Modena, Italy)
2. El Celler de Can Roca (Girona, Spain)
3. Eleven Madison Park (New York City)
4. Central (Lima)
5. Noma (Copenhagen)
6. Mirazur (Menton, France)
7. Mugaritz (San Sebastian, Spain)
8. Narisawa (Tokyo, Japan)
9. Steirereck (Vienna)
10. Asador Etxebarri (Biscay, Spain)
11. D.O.M. (Sao Paulo, Brazil)
12. Quintonil (Mexico City)
13. Maido (Lima) -- Highest riser
14. Ledbury (London)
15. Alinea (Chicago)
16. Azurmendi (Near Bilbao, Spain)
17. Piazza Duomo (Alba, Italy)
18. White Rabbit (Moscow)
19. Arpege (Paris)
20. Amber (Hong Kong)
21. Arzak (San Sebastian, Spain)
22. The Test Kitchen (Cape Town, South Africa)
23. Gaggan (Bangkok)
24. Le Bernardin (New York City)
25. Pujol (Mexico City)
26. Clove Club (London) -- Highest new entry
27. Saison (San Francisco)
28. Geranium (Copenhagen, Denmark)
29. Tickets (Barcelona)
30. Astrid y Gaston (Lima)
31. Nihonryori RyuGin (Tokyo)
32. Restaurant Andre (Singapore)
33. Attica (Melbourne, Australia)
34. Restaurant Tim Raue (Berlin, Germany)
35. Vendome (Bergisch Gladbach, Germany)
36. Borago (Santiago)
37. Nahm (Bangkok)
38. De Librije (Zwolle, Netherlands)
39. Le Calandre (Padua, Italy)
40. Relae (Copenhagen)
41. Faviken (Jarpen, Sweden)
42. Ultraviolet (Shanghai, China)
43. Biko (Mexico City)
44. Estela (New York)
45. Dinner by Heston Blumenthal (London)
46. Combal.Zero (Rivoli, Italy)
47. Schloss Schauenstein (Furstenau, Switzerland)
48. Blue Hill at Stone Barns (New York)
49. Quique Dacosta (Denia, Spain)
50. Septime (Paris)

தமிழ்மீடியாவுக்காக நவன்
——

comments powered by Disqus