Saturday, Nov 17th

Last updateFri, 29 Jul 2016 3pm

மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினம்!:முக்கிய தகவல்கள்

மே 31 செவ்வாய்க் கிழமை உலக புகையிலை எதிர்ப்பு தினமாகும். உலகம் முழுதும் வருடந்தோறும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக (No Tobacco Day) ஆக அனுசரிக்கப் படுகின்றது. இன்றைய உலகில் மிகப் பொதுவான புகைபிடித்தல் வழிமுறையாக முதன்மையாக தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்ற சிகரெட்டுகள் மூலமானதாகும்.

இருந்தாலும் உதிரிப் புகையிலை மற்றும் சுருட்டு காகிதம் கொண்டு கையால்-சுற்றப்பட்டவைகளும் கூட உள்ளன. இதர புகைக்கும் கருவிகளில் உள்ளிட்டவை குழாய்கள், சுருட்டு வகைகள், ஹூக்காக்கள் மற்றும் புகைக் குழாய்கள் ஆகியவையாகும்.

இவை அனைத்திலும் புகையிலை தவிர்த்து ஆபத்தான போதைப் பொருட்களான நிக்கொடின், ஹெராயின் என்பன கூட அடங்கியுள்ளன. உலகில் புகையிலை மற்றும் சிகரெட்டில் அடங்கியுள்ள போதைப் பொருட்கள் காரணமாக சராசரியாக ஒரு வருடத்தில் 6 மில்லியன் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதில் 600 000 பேர் புகைப் பிடிப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பதால் பாதிக்கப் பட்டவர்கள் ஆவர்.

உலக சுகாதாரத் தாபனமான WHO உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987 ஆம் ஆண்டு பிரகடனப் படுத்தியது. அன்று முதல் கடந்த 20 வருடங்களில் இத்தினத்தின் தாக்கத்தால் அரசாங்கங்கள், பொதுமக்கள் சுகாதார அமைப்புக்கள், புகைபிடிப்பவர்கள், வள்ர்ந்து வருபவர்கள் மற்றும் புகையிலை உற்பத்தித் துறை என்பவற்றில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ஆனால் புகைத்தலின் வரலாறு சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது எனவும் கணிக்கப் பட்டுள்ளது. முற்காலத்தில் புகை பிடித்தல் மத ரீதியிலான சடங்குகளில் தொடர்புடைய வகையில் உருவாகியது.

நிகழ்கால உலகில் ஆண்கள் 47% வீதமும் பெண்கள் 12% வீதமும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். இதேவேளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் போலவே உலக சுகாதார தினம், உலக இரத்த தான தினம், உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் என்பன போன்றனவும் உலக சுகாதாரத் தாபனமான WHO இனால் அறிமுகப் படுத்தப் பட்டு அனுசரிக்கப் பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus