Saturday, Nov 17th

Last updateFri, 29 Jul 2016 3pm

நடிகை வித்யாபாலனுக்கு சிறு நீரகத்தில் கற்கள்: சிறு உடல்நலக் குறிப்பு

நடிகை வித்யா பாலனுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.

வித்யா பாலன் புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாட விமானத்தில் புறப்பட்டு உள்ளார்.ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் தரையிறக்கப்பட்டதாம். காரணம் அவருக்கு திடீரென அதிக வயிற்றுவலி ஏற்பட்டதுதானாம். இதையடுத்து இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். இவருக்கு சிறு நீரகத்தில் கற்கள் உள்ளன என்பது மருத்துவர்கள் கூறும் தகவல்.

மத்திய அரசின் கழிப்பறை விளம்பரத்துக்கு மாடலாக இருக்கும் வித்யா பாலனின் உடல் ஆரோக்கியம் குறித்த இச் செய்தியினூடாக பொது மக்கள் கவனத்திற்கு கொண்டுவரக் கூடிய உடல் நல ஆலோசனை தொடர்பில், பெண்களுக்கு அவ்வளவு எளிதில் சிறு
நீரகத்தில் கற்கள் வந்துவிடுமா ?  என பிரபல பெண் மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, "என்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் முக்கால்வாசி கல்லூரிப் பெண்கள் சிறுநீரகத் தொற்று, சிறு நீரகத்தில் கற்கள் என்கிற புகார்களுடன்தான் வருகின்றனர் என்று கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்ததில் கல்லூரி அல்லது +2 படிக்கும் மாணவிகள் என்று
பார்க்கும்போது இவர்கள் காலையில் வீட்டில் சிறுநீர் கழித்துவிட்டு செல்வதோடு சரி. பின்னர் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சிறுநீர் கழிப்பதில்லை என்கிற உண்மை தெரிய வந்தது.

இப்படி சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் தண்ணீரும் குடிப்பதில்லையாம். அவ்வப்போது தொண்டையை நனைத்துக் கொள்வதோடு சரி என்றும் சாதாரணமாகச் சொல்கிறார்கள். இது என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதை எப்படி அந்த பெண்ணின் தாய் கண்டுக்கொள்ளாமல் விட்டார் என்கிற கோபம் கூட எனக்கு வரும் என்றும் அந்த மருத்துவர் கூறுகிறார்.

சிறுநீரகம் ஒரு மெஷின் போன்று நம் உடலில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதன் செயல்பாட்டுக்கு பெட்ரோல் போன்று ஒரு முக்கியமான அம்சம் தண்ணீர். அந்த தண்ணீரை நீங்கள் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகத்தானே செய்யும். பொது கழிப்பு இடங்கள் அல்லது,பள்ளிக் கல்லூரிகளில் சிறுநீர் கழிக்க இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்கிற பதில்
மானவிகளிடமிருந்து வருகிறது. இது சரியல்ல, இதற்கு மாற்று வழியைக்கண்டு பிடித்து தண்ணீரை நிறையக் குடித்து உடல் நலத்தைப் பேணுங்கள்.

இல்லாவிடில், ஒரு குழந்தை பெற்ற உடன் உங்கள் சிறுநீரகம் வலுவிழந்து போகும், இருமினாலும், தும்மினாலும் சிறுநீர் தாமாக கழியும். சிறுநீர்த் தொற்று ஏற்பட்டு, அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். சிறுநீரகக் கற்கள் உண்டாகும் என்று கூறியுள்ள மருத்துவ நிபுணர் பல வழிக் காட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.

உங்களுக்குப் பிடிக்காத கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க நேர்ந்தால்...கையில் டெட்டால் போன்ற கிருமி நாசினிகள், டிஷ்யூ பேப்பர் எடுத்துச் செல்லுங்கள். சிறுநீர் கழித்த உடன் டிஷ்யூ பேப்பரில் டெட்டாலை நனைந்து உங்களது பிறப்புறுப்பைத் துடைத்து சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.

கூடியவரை வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து நமது டாய்லெட் வகைகளை உபயோகிங்கள். அப்படி வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகிக்க வேண்டி வந்தால், ஒரு முறை ஃபிளஷ் பண்ணிவிட்டு, பின்னர் அதில் டெட்டால் விட்டு, டாய்லெட்டின் உட்காரும் மேற்புறத்திலும் டெட்டால் கலந்த நீரைத் தெளித்து விட்டு பின்னர் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கவும் " என்றார்

comments powered by Disqus