கட்டுரைகள்

கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

மேலும் மனித இனத்தின் முதலாவது விண் இடைப் பயணமாக அமையக் கூடிய Starshot Breakthrough குறித்த சில தகவல்களையும் பார்த்தோம்.. கடந்த தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -9 (We are Not Alone - Part 9)

2016 August 24th Press Conference on Starshot Breakthrough in Germany

இனி Starshot செயற்திட்டத்தின் அம்சங்கள் குறித்த மேலதிக தகவல்களைப் பார்ப்போம். ஏப்பிரல் 12 2016 ஆமாண்டு நியூயோர்க்கில், யூரி மில்னெர் என்ற பௌதிகவியலாளர் மற்றும் வான் பௌதிகவியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங் மற்றும் Facebook CEO மார்க் சூக்கர்பர்க் போன்ற முக்கிய பிரமுகர்களால் இந்த செயற்திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் போது இந்த Starshot செயற்திட்டத்தின் ஆரம்ப கட்ட ஆராய்ச்சிக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப் பட்டது.

நியூஹாரிசன் விண்கலம்

இந்த செயற்திட்டத்தின் இறுதி செலவு $5 இல் இருந்து $10 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்றும் முதலாவது ஏவுகை 2036 ஆமாண்டளவில் சாத்தியமாகும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. எமது சூரிய குடும்பத்தில் பூமியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள கிரகமான புளூட்டோவுக்கு சுமார் 9.5 வருடங்கள் பயணித்து சென்றடைந்த நியூஹாரிசன் விண்கலம் 2015 ஜூலை மாதம் முதலாவது புகைப் படத்தை அனுப்பியது. ஆனால் இந்த Starshot விண்கலமோ தன் முதலாவது லேசர் கதிர் மூலமான உந்தத்தைப் பெற்ற பின் வெறும் 3 நாட்களில் புளூட்டோவை தாண்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ப்ரொக்ஸிமா b என்ற வெளிப்புறக் கிரகத்தை 22 வருடங்களில் சென்றடைந்து விடும் என்பதை முன்பே கூறியிருந்தோம்.

இந்த Starshot விண்கலத்தின் பிரதான இலக்குகளாக பின்வரும் விடயங்களைக் கூறலாம். வெறும் கொள்கை அளவிலேயே இருக்கும் அதிவேக லேசர் போன்ற ஒளிக் கதிர்களால் செலுத்தப் படக் கூடிய நேனோ விண்கலங்களைப் பரிசோதித்து நிரூபித்தல் மற்றும் ஆல்பா செண்டூரி நட்சத்திரத் தொகுதிக்கு செல்லும் முதலாவது விண்கலத்திற்கான அடித்தளங்களை அடுத்த தலைமுறைக்குள் அமைத்தல் என்பவையே அவை ஆகும்.

இதை விட சூரிய குடும்பங்களை ஆய்வு செய்தல், சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையக் கூடிய ஆபத்தான விண்கற்கள் குறித்த தகவல்களை சேகரித்தல் மற்றும் பூமிக்கு இணையான வெளிப்புறக் கிரகங்களை அடைந்து புகைப் படம் எடுத்தல் போன்ற வேறு இலக்குகளும் Starshot இற்கு உள்ளன. இந்த செயற்திட்டம் Solar Sail அதாவது சூரிய பாய்மர படகு என்ற கொள்கை கட்டமைப்பைக் கொண்டது.

Laser Beam Transmitter

முதலில் மிகச் சிறிய செண்டிமீட்டர் நீளமே உடைய சுமார் 1000 விண்கலங்கள் அடங்கிய தாய் செய்மதி (Mothership) விண்ணில் ஏவப்படும். பின்பு மேலே இருக்கும் படத்தில் காணப்படும் உபகரணம் போன்ற கருவிகள் மூலம் Phase Array என்ற லேசர் கதிர்கள் ஒவ்வொரு சிறிய விண்கலங்களையும் படிப்படியாக உந்தும் விதத்தில் அவற்றை நோக்கி செலுத்தப் படும். டேய்ட்டொன் பல்கலைக் கழகத்தினால் உருவாக்கப் பட்ட ஒரு லேசர் டிரான்ஸ்மிட்டர் கருவியையே மேலே பார்க்கின்றீர்கள். இந்தக் கருவியில் உள்ள 21 வில்லைகள் மூலம் வெளியாகும் லேசர் கதிர் ஒரு குறித்த இலக்கில் குவிக்கப் பட முடியும்.

Aluminaized Plastic Material

ஆனால் ஸ்டார்ஷாட் செயற்திட்டத்தின் போது இது போன்ற சுமார் பில்லியன் கதிர்களது வீச்சு குவிக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒவ்வொரு சிறிய விண்கலங்களுக்கும் கிடைக்கும் 1 TJ சக்தியின் விளைவால், 10 நிமிடத்தில் ஒளியின் வேகத்தில் 1/5 மடங்கு வேகம் எட்டப் படும். மேலே உள்ள புகைப் படத்தில் காட்டப் பட்டுள்ள ஸ்டார்ஷொட் இற்கு இணையான பொருள், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் இணைத்து தயாரிக்கப்ப் பட்டது ஆகும். இது மனிதனின் தலை முடியை விட மிக மிக அடர்த்தி குறைந்தது. இது போன்று ஸ்டார்ஷாட் ஓடத்தில் பயன் படுத்தப் பட்டிருப்பது கிரபைன் (Graphene) என்ற மிகவும் மெல்லிய எடை குறைந்த மூலகமாகும்.

இவ்வாறு மிக நுணுக்கமாகத் தயாரிக்கப் பட்டிருந்தாலும் இந்த விண்கலங்களின் பயணத்தின் போது விண்வெளியில் இருக்கக் கூடிய தூசுகள், ஹைட்ரஜன் மூலக்கூறுகள் மற்றும் அண்டங்களுக்கிடையே பயணிக்கும் காஸ்மிக் கதிர்கள் போன்றவற்றால் இடையூறு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

இது தவிர இந்த Starshot திட்டத்தில் பல முக்கிய தொழிநுட்ப சவால்களும் உள்ளன. முதலாவது Light Propulsion என அழைக்கப் படும் லேசர் கதிர்களால் ஆன உந்துதலைப் பெறுவதற்கு மிக அதிகளவு சக்தி செலவாகும். உதராணமாக 1 கிகாவாட் லேசர் கதிரை உற்பத்தி செய்ய ஒரு மிகப் பெரும் அணுசக்தி மின் நிலையம் ஒரு நாளில் உருவாக்கும் மின்சாரத்தின் அளவு இதற்குத் தேவைப் படும். எனவே மிகவும் எடை குறைந்ததாக ஸ்டார்ஷொட் Sail விண்கலங்கள் இருக்க வேண்டும்.

Starshot Solar Sail Chip

ஆனால் சில கிராம்கள் எடைக்குள், கமெரா, கணணி, லேசர் தகவல் தொடர்பு மற்றும் அணுசக்தி பேட்டரி போன்றவை அடங்கும் விதத்தில் இந்த விண்கலங்களுக்கான சிப் (Chip) தயாரிக்கப் பட வேண்டும். இதை விட இந்த அனைத்து தொழிநுட்ப வசதிகளும், குறித்த Sail விண்கலங்கள் அதீத வேகத்தில் பயணிக்கும் போது ஏற்படும் சவால்களான அதீத வேக அதிகரிப்பு (accelaration), குளிர், வெற்றிடம் மற்றும் போட்டோன்கள் ஆகியவற்றை சமாளிக்கும் விதத்தில் கட்டமைக்கப் படவும் வேண்டும்.

இந்த Sail விண்கலங்கள் விண்வெளித் தூசுகளுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்கு பூமியில் அல்லாது, பூமிக்கு மேலே இருந்து செயற்படும் விதத்திலான லேசர் கதிர் உந்தும் கருவியைத் தயாரிப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப் பட்டு வருகின்றன. தொழிநுட்ப அளவில் இவ்வாறு பூமிக்கு மேலே லேசர் கற்றை கருவியை அமைப்பது இன்னமும் அதிக சவாலான ஒரு செயலாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த Starshot செயற்திட்டம் வருங்காலத்தில் சாத்தியமானால், Proxima b என்ற வெளிப்புறக் கிரகத்துக்கான இதன் முதலாவது பயணத்தைத் தொடர்ந்து வேறு பல முக்கியத்துவம் மிக்க நட்சத்திரத் தொகுதிகளுக்கும் இது போன்ற பயணங்கள் திட்டமிடப் பட்டுள்ளன. இதற்கு சிலியில் அமைந்துள்ள VLT என்ற பூமியின் மிகப் பெரும் தொலைக் காட்டி உதவிகரமாக விளங்கவுள்ளது.

Starshot Project Computer Design

 

ஸ்டார்ஷொட் செயற்திட்டத்தின் போது பாவிக்கப் பட வேண்டிய லேசர் கதிர்களது கற்றைகள் மில்லியன் கணக்கான சூரியனின் சக்திக்கு இணையானது என்பது அதன் சாத்தியத்தைப் பெரிதும் கேள்விக்குறியாக்கியுள்ள விடயமாக உள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் முக்கிய நபரான மில்னெர் இன்னும் 5 இலிருந்து 10 வருடங்களுக்குள் இதற்கான சாத்தியம் குறித்து நாம் அறிய முடியும் என்றும் அதற்கான தேவை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Starshot செயற்திட்டம் குறித்த மேலதிக தகவல்களை அடுத்த தொடரிலும் எதிர்பாருங்கள்..

அடுத்த தொடருடன், எமது தளத்தில் தொடராக வெளி வந்த நாம் தனிமையில் இல்லை அறிவியல் கட்டுரை நிறைவுறுகின்றது.. புதிய அறிவியல் கட்டுரை தொடர்பான அறிவிப்பை விரைவில் எதிர்பாருங்கள்..

நன்றி, தகவல் - நேஷனல் ஜியோகிராபிக் சஞ்சிகை, விக்கிபீடியா, நாசா

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.