Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

கரப்ட் ஆகிவிட்டார் கயல் ஆனந்தி

கெரகம் சும்மாயிருந்தாலும், கொட்டு மேளம் ஆட விட்ருமில்லையா? அப்படியாகியிருக்கிறார் கயல் ஆனந்தி. 

தமிழ்சினிமாவின் சமீபத்திய ஹீரோயின்களில் கொடுத்த இடத்தில் தங்கிக் கொள்வார். கூடவே பட்டாளங்களை கூட்டி வந்து செலவு வைக்க மாட்டார். எளிய சம்பளம், பொலிவான வரவேற்பு என்று எல்லா வகையிலும் ஆஹா சொல்ல வைத்த ஆனந்தியை, வைரஸ் அட்டாக் பண்ணி விட்டதோ என்கிற டவுட் சமீப காலமாக வந்திருக்கிறது. உங்க லெவலுக்கு நீங்க அது கேட்கலாம்... இது கேட்கலாம் என்று ஒண்ட வந்த மேனேஜர்கள் உசுப்பிவிட்டதால், சற்றே கரப்ட் ஆகிவிட்டாராம் ஆனந்தி.

சரி செய்யக்கூடிய கோளாறுதான் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது திரையுலகம். கீர்த்தி சுரேஷ் வந்து ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டை ஒழித்தார். மிச்ச மீதி மார்க்கெட்டை ஆனந்தி ஒழிப்பார் என்று நம்பிக் கொண்டிருந்த பலரையும், ஆனந்தியின் இந்த குணக்கேடு திட்டமிட்ட சதியோ என்கிற அளவுக்கு பேச வைத்திருக்கிறது. முழிச்சுக்கோம்மா.... 

comments powered by Disqus