Monday, Oct 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

அஜீத் முடிவால் அரவிந்த்சாமி திடுக்

இந்த விஷயம் அரவிந்த்சாமிக்கு தெரியுமா? தெரிந்தால் அதற்கப்புறம் அஜீத் விஷயத்தில் அவர் உருப்படியான பதிலை சொல்லுவாரா?

இப்படி இரண்டு கேள்விகளை அழுத்தமாக தட்டிவிடுகிறது தல 57 குறித்த கசமுசா ஒன்று. இந்த படத்தில் அஜீத்திற்கு வில்லனாக நடிக்க அரவிந்த்சாமியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால், ஜெயம் ரவி மற்றும் சிலரது படங்களில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து வருவதால், அவர் எதுக்கு என்று நினைக்கிறாராம் அஜீத். இவரிடம் பேச்சு வார்த்தையை நடத்திக் கொண்டே, இன்னும் சிலரையும் அணுகி வருகிறார் டைரக்டர் சிவா. நடுவில் கிராஸ் ஆன அர்ஜுனுக்கு நோ நோ சொல்லிவிட்டாராம் அஜீத்.

தெலுங்குல ரிட்டையர் ஆன சூப்பர் ஹீரோ யாராவது சிக்குறாங்களா பாருங்க என்ற அஜீத்தின் அட்வைசை சிரமேற்கொண்டு ஏற்றுக் கொண்ட சிவா, இப்போது தெலுங்கு வெப்சைட்டுகளில் மேய்ந்து கொண்டிருக்கிறார். முகம் பரிச்சயப்படணுமே? 

comments powered by Disqus