Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

மறுபடியும் ஒட்டுற பிரிவா அது?

கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு அதிசயம். தமிழ்சினிமாவின் மூன்று துருவங்கள் என்று மீடியாக்களில் ஊதப்பட்ட தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மூவரும் ஒரே மேடையில் இருந்தார்கள்.

ரவிகுமார் தவிர வேறு யார் முயற்சித்திருந்தாலும் நடந்திராத விஷயம் இது. பத்திரிகையாளர்களின் கண்ணும் கேமிராவும் இம்மூவரின் செய்கைகளை கவனித்துக் கொண்டேயிருக்க, விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் மட்டுமே சகஜமாக பேசிக் கொண்டார்கள். என்னவோ, தனுஷும் சிவாவும் தாமரை இலையில் தண்ணீர் விழுந்தது போலவே இருந்தார்கள். அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு என் கம்பெனி பெரிய கம்பெனியில்ல என்று தனுஷ் ஓப்பனாக பேட்டி கொடுக்கிற அளவுக்கு போன பின், எப்படி வரும் இயல்பு? இருந்தாலும், ஒப்புக்கு ஓரிரு வார்த்தைகள் மைக்கில் அன்பை கொட்டிக் கொண்டார்கள் இருவரும்.

இப்படிதான் இருக்கணும் பிரண்ட்ஷிப். இல்லேன்னா மீடியாவுக்கு எங்கேயிருந்து வரும் சேதி?

comments powered by Disqus