Wednesday, Dec 12th

Last updateFri, 29 Jul 2016 3pm

கபாலி- திருட்டு விசிடிக்காரர்களுக்கும் வெற்றி

 
 
கபாலி படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் கண்டு களித்திருக்கிறார் ரஜினி. இந்த சிறப்பு காட்சியில் அவருடன் சேர்ந்து படம் பார்த்தவர்கள் சுமார் 50 பேர்தான். அதிலும் யாரோ ஒரு காவாலி, கபாலியில் ரஜினியின் அறிமுகக் காட்சியை மட்டும் செல்போனில் படம் பிடித்து உலகம் முழுக்க உலவ விட்டுவிட்டார். அது காற்றில் கசிந்து கண்டபடி பயணிக்க, பதறிப் போனது கபாலி வட்டாரம். தமிழின் முன்னணி இணையதளம் ஒன்று அதை தனது தளத்தில் இணைத்து நாடெங்கும் ஓடவிட்டதில் கடும் அப்செட் ஆனவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாதான். ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் என்று ட்விட்டரில் கோபப்பட்டதுடன், இதை யாருக்கும் ஷேர் பண்ணாதீங்க என்று ரஜினி ரசிகர்களுக்கும் வேண்டுகோள் வைத்தார். உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டி, அங்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பின்பும் பல இணைய தளங்களில் கபாலி டிஜிட்டல் பிரிண்ட்டில் ஜொலித்தார். டிக்கெட் விலை 2000 வரைக்கும் போன பின்பு, இந்த விஷயத்தில் பாவ புண்ணியம் பார்க்கவில்லை ரசிகர்களும். 
 
என்னவோ... திருட்டு விசிடிக் காரனுங்களுக்கு மறுபடியும் ஒரு நம்பியார் வெற்றி. 
 
ம்... எத்தனை காலத்துக்கு என்றுதான் பார்ப்போமே? 
comments powered by Disqus