Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

தில் தில் ஐஸ்வர்யா

எங்கெல்லாம் வெற்றிடம் இருக்கோ, அங்கெல்லாம் சுலபமாக நுழைந்து கொள்ளுமாம் காற்று. அப்படிதான் ஆகிவிட்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சின்னப்படமோ, பெரியப் படமோ, சின்ன ஹீரோவோ, பெரிய ஹீரோவோ, அழைத்தால் நடித்துக் கொடுப்பது என்கிற அவரது கொள்கை, பலருக்கும் இனிப்பு. இப்படி வாகு வழி இல்லாம படத்தை ஒத்துகிட்டா உங்களுக்குன்னு ஒரு இடத்தை எப்ப பிடிப்பீங்க என்றால், காக்கா முட்டை படம் ஒண்ணு போதும். நான் நல்ல நடிகைன்னு நிரூபிக்க. அதற்கப்புறம் அதே மாதிரி படங்கள் வந்தால் நடிப்போம். இல்லையென்றால்... என் மேல நம்பிக்கையிருக்கு. எதுவா இருந்தாலும் நடிப்போம் என்கிறார்.

அடிப்படையில் தில் மற்றும் திம்சு கட்டை பேச்சு கொண்டவர் ஐஸ்வர்யா. இந்த விஷயத்தில் இன்னும் தில் தில்!

comments powered by Disqus