Sunday, Aug 19th

Last updateFri, 29 Jul 2016 3pm

பாலாவை விரட்டுதா கெட்ட நேரம்?

எம்மாம் பெரிய டைரக்டர்... எவ்ளோ சின்னதா சுருங்கிட்டார் பார்... என்று டைரக்டர் பாலா குறித்து கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். ஏன்?

தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு அவரது இமேஜில் ஒரே அவநம்பிக்கை கரியை பூச ஆரம்பித்துவிட்டது ரசிகர்கள் உலகம். ரசிகர்களின் மனநிலையை கூட சட்டென்று மாற்றிவிடலாம். ஆனால் ஹீரோக்களும் அப்படியே நினைத்தால் பாலாவின் பிழைப்பு என்னாவது? கோடம்பாக்கத்திலிருக்கும் ஹீரோக்களில் பலர் பாலாவின் பெயரை சொன்னாலே எடுக்கிறார்கள் ஓட்டம். ஒவ்வொரு நபராக தூதுவிட்டு ஓய்ந்து போன பாலா, கடைசியாக சரண்டர் ஆகியிருப்பது விஷ்ணுவிஷாலிடம்.

போலீஸ் அதிகாரி ஒருவரின் பிள்ளை. பிறந்ததிலிருந்தே அதிகாரத்தை ருசித்தவர். பாலா போன்ற கோபம் மிகை இயக்குனரிடம் சிக்கினால், சமாளிக்க முடியுமா? சற்றே யோசிக்கிறாராம். ஒருவேளை அவர் சம்மதித்தால், அழுக்கு லுங்கியோ.... ஆளை பிடிச்ச சனியனோ... பேராபத்தும், பெரும் சோகமும் இருக்குய்யா இருக்கு! 

comments powered by Disqus