Thursday, Aug 16th

Last updateFri, 29 Jul 2016 3pm

மிச்சம் மீதியிருக்கும் த்ரிஷாவின் நம்பிக்கை

த்ரிஷாவின் நம்பிக்கையில் தொபுக்கடீர் என்று விழுந்திருக்கிறது ஏமாற்றம். ‘நாயகி’ என்ற படத்தில் நடித்திருந்தாரல்லவா? அந்த படத்தை தமிழில் வெளியிடுவதற்கு முன் தெலுங்கில் வெளியிட்டுவிட்டார்கள்.

இங்கு கபாலி வருவதால், அப்புறம் வரலாம் என்று நினைத்திருந்தார்களாம். அந்தோ பரிதாபம். படம் தியேட்டருக்கு வந்த சில மணி நேரத்திலேயே த்ரிஷாவுக்கு ரிசல்ட் போய்விட்டது. இனிமேல் எந்த ஹீரோக்களையும் நம்பத் தேவையில்லை. நாமே ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிப்பது. படத்தை ஹிட்டடிப்பது. சம்பளத்தை கூட்டுவது. நயன்தாராவை முந்துவது...

இதுதான் த்ரிஷாவின் லட்சியமாக இருந்தது. அதில் பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டுவிட்டது நாயகியின் ரிசல்ட். இருந்தாலும் நம்பிக்கையின் மிச்சம் கொஞ்சம் இருப்பதால், ‘அங்கு ஹிட்டாகாத பல படங்கள் இங்கு ஆஹா ஓஹோவென ஓடியிருக்கிறது. அதனால் தமிழில் பிரமாண்டமாக வெளியிடுவோம்’ என்று நினைத்திருக்கிறாராம். தமிழகமே... த்ரிஷாவை(யும்) வாழ வை!

comments powered by Disqus